#BREAKING 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 
rain school

தமிழகத்தில் மழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rain school leave

தென் தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக மற்றும் புதுவையில் அனேக இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி ,தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று கன முதல் மிக கனமழை பெய்தது.  அத்துடன் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ,சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ,விருதுநகர் ,மதுரை ,தூத்துக்குடி ,திருநெல்வேலி ,கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது. இன்று முதல் வருகிற 4ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி  மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.