27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 
s

கனமழையின் காரணமாக தமிழகத்தில் 27  மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  நேற்று 29 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 27 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

hr

 வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது.   கடந்த மாதம் 29 தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது.   சென்னையில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.   காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  

 இந்த கனமழை மழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், ராணிப்பேட்டை, திருச்சி, நீலகிரி ,பெரம்பலூ,ர் கரூர் ,தஞ்சாவூர், சேலம், தர்மபுரி, கோவை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி ,திருப்பத்தூர் , மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.