தி.மலை மாவட்டத்தில் 4 இடங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

 
ர்ர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார், வந்தவாசி நகராட்சிகளிலும்,  வெம்பாக்கம் ,சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களிலும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.   தொடர் கனமழையின் காரணமாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.  அன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. 

ட்

 சென்னையில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. 

 தமிழ்நாட்டில் கனமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருவாரூர்,  நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

 இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில்  செய்யாறு, வந்தவாசி நகராட்சிகளிலும் ,வெம்பாக்கம்,  சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.