இன்றும் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
schools

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை காரணமாக 4 தாலுக்காக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் கோவை,  நீலகிரி ஆகிய மாவட்டங்களில்கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரியில்  பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்காக்களில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

Rain

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று  மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

rain

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.