"அனைவரது இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றுவோம்" - ஜி.கே. வாசன் வலியுறுத்தல்!!

 
tn

நமது பாரத நாட்டின் 75 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றுங்கள் என்று ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும். எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் இந்திய சுதந்திர போராட்டத்தில் முன்னிலை வகித்தது என்பது மறுக்கபடாத உண்மை . 1857 - ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய் கலகம் தான் முதல் சுதந்திரபோராட்டம் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகிறது . ஆனால் அதற்கு முன்னரே 1751 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முழக்கமிட்டவர் புலித்தேவன் மற்றும் 1801 ஆம் ஆண்டு போராடிய சின்னமருது , பெரியமருது . மேலும் தீரன் சின்னமலை , வீரபாண்டிய கட்டபொம்மன் , மருது பாண்டியர்கள் , சிவகங்கையின் , வீரமங்கை வேலுநாச்சியார் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

National Flag

19 - ஆம் நூற்றாண்டில் மகாத்மா காந்தியின் தமைமையை ஏற்று போராடிய தமிழக வீரர்கள் , மகாகவி பாரதியார் , சுப்பிமணிய சிவா , வ.உ.சிதம்பரனார் , கொடிக்காத்த குமரன் , வீரன் வாஞ்சிநாதன் , திரர் . சத்திமூர்த்தி , காமவீரர் காமராஜர் , இராஜாஜி , திரு.வி.க. கல்கி , தியாகி . கக்கன் , முத்துராமலிங்க தேவர் என்று பல்லாயிரம் பேர்கள் பங்குகொண்டு போராடி சுதந்திர வரலாற்றில் இடம்பெற்றதை இன்று நினைவு கூறுவோம் . இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்று நம் முன்னோர்கள் சிந்திய இரத்தத்தாலும் , வியர்வையாலும் , அனுபவித்த இன்னல்களாலும் , துயரங்களாலும் , தியாகத்தாலும் கிடைத்தது . இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் நமக்கு பெயர் தெரிந்தவர்களை விட , தெரியாதவர்கள் எண்ணிலடங்காது.

gk

எனவே இந்த 75 - வது இந்திய சுதந்திர தினத்தில் நாம் அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் , அவர்களின் தியாகத்தையும் நினைவில்கொள்ளுவோம் . அவர்களை போற்றுவோம் . நமது தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக 75 - வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வருகிற 13 - ஆம் தேதி முதல் 15 - ஆம் தேதி வரை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளின்படி நமது இந்திய தேசிய கொடியை அனைவரது இல்லங்களிலும் பறக்கவிட்டு நமது உள்ளத்திலும் , இல்லத்திலும் உள்ள தேசப் பற்றினை பறைசாற்றுவோம் . நமது ஒற்றுமையை உறுதிப்படுத்துவோம் . மக்கள் தலைவர் ஐயா மூப்பனார் அவர்களின் தாரக மந்திரமான வளமான தமிழகத்தையும் , வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.