புட்போர்ட் அடிப்பது தப்பில்ல, முடிதிருத்தம் செய்யுறது தப்பு - உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ்

 
க்க்

பேருந்தில் மாணவர்கள் புட்போர்ட் அடிப்பதால் நிறைய விபத்துகள் நேருகின்றன என்று காவல்துறை அவ்வப்போது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றது.   ஆனால் மாணவர்கள் பேருந்தில் புட்போர்ட்  அடிப்பதை நியாயப்படுத்தி இருக்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி பி. என். பிரகாஷ்.   பருவ வயதில் வரும் காதலுக்கு அவன் காரணம் இல்லை . அது ஹார்மோன் செய்யும் வேலை என்றும் சொல்லி இருக்கிறார்.  ஹேர் ஸ்டைல் ஏடாகூடமாக வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை போலீசார் பிடித்து முடி திருத்தி அனுப்புகிறார்கள் .  அப்படி செய்வதும் தவறு என்று சொன்ன நீதிபதி,   நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் மாதிரி ஹேர் ஸ்டைல் வைத்துக் கொள்ளவில்லையா?  நடிகர்களை பார்த்து பெல்பாட்டம் பேண்ட் அணியவில்லையா என்று கேட்டிருக்கிறார்.

ஹி

 சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்துகின்ற பறவை திட்டம் நிகழ்ச்சி நடந்தது.   இந்த திட்டம் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. என். பிரகாஷ் தொடங்கி வைத்து பேசத் தொடங்கினார்.   அப்போது பேசிய அவர்,  பேருந்தில் படிக்கட்டு பயணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்படுவது குறித்து,   நீங்கள் யாரும் உங்கள் இளம் வயதில் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தது இல்லையா? என்று கேட்டார்.

 காதல் திருமண விவகாரங்களில் சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுவதும்,  கைது செய்யப்படுவதும் கைது செய்வதும் அவர்களின் வாழ்க்கையை எதிர்காலத்தை பாழாக்கும் .   சிறுவர்கள் பருவ காதல் விவகாரங்கள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது.  அது குற்ற செயல் இல்லை.   ஸ்டைலாக முடி திருத்திக் கொள்ளும் மாணவர்களை பிடிக்கிறீர்கள். 

  ஏன் நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி,  ரவிச்சந்திரன் மாதிரி ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டதில்லையா? அந்த காலத்து நடிகர்கள் போல பெல்பாட்டம்  அணிந்து ஸ்டைல் காட்டியது இல்லையா? என்று  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் துறை உயர் அதிகாரிகளிடம் இப்படி நீதிபதி கேட்க,   என்ன சொல்வதென்றே தெரியாமல் அதிர்ச்சியில் இருந்திருக்கிறார்கள் போலீசார்.