ஊழல் புகார் - நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்!

 
suspend

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தனது நெருங்கிய உறவினர்களுக்கு 4,833 ரூபாய் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டார் என்று திமுக புகார் கூறியது.   இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு  சிபிஐ விசாரணைக்கு கைமாறிய நிலையில்  மூன்று மாத காலத்திற்குள் விசாரணையை  முடிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.   இந்த வழக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ep

இந்நிலையில் அதிமுக ஆட்சியில் ரூபாய் 692 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த  புகாரின் அடிப்படையில் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது சாலை பராமரிப்பு டெண்டரில் முறைகேடு என புகார் அளித்துள்ளது.  

ep

தஞ்சை கோட்டத்தில் மட்டும் நெடுஞ்சாலை துறைக்கு டெண்டர்களால் அரசுக்கு 692 கோடி இழப்பு என புகார் அளித்துள்ளது 692 கோடி ஊழலில் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பார் பொறியாளர் பழனி முக்கிய பங்கு வகிப்பு என நெடுஞ்சாலை துறை அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது