மனைவி தாலியை கழற்றி வீசுவதும் கணவருக்கு உச்சபட்ச மன ரீதியான துன்புறுத்துலை ஏற்படுத்தும் செயல்

 
Highcourt

மனைவி தாலியை கழற்றி வீசுவதும் கணவருக்கு உச்சபட்ச மன ரீதியான துன்புறுத்துலை ஏற்படுத்தும் செயல் என சென்னை உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

ஈரோடு மருத்துவ கல்லாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் சி. சிவகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில்,
கடந்த 2016ஆம் ஆண்டு ஈரோடு குடும்ப நல நீதிமன்றத்தில் தன் மனைவியிடமிருந்து  தனக்கு விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததாகவும் ஆனால் நீதிமன்றம் வழங்க மறுத்தவிட்டதாக தெரிவித்துள்ளார்.எனவே தனக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி மற்றும் எஸ் எம் சௌந்தர் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது..
அப்போது  மனுதாரர் சார்பில்
இருவரும் பிரியும் சமயத்தில் தாலியை மனைவி கழற்றியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனைவி சார்பில், செயினை மட்டுமே கழற்றியதாகவும் தாலியை தொடர்ந்து அணிவித்து வந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
 இந்து திருமண சட்டம் பிரிவு 7ன் படி, தாலியை அணிவுது அவசியம் அல்ல என்றும் தாலியை கழற்றி இருப்பது உண்மை என்று கருதினாலும் திருமண உறவில் அது எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம், திருமண நிகழ்வுகளில் தாலி கட்டுவது அவசியமான சடங்கு என்பது அனைவருக்கும் தெரியும் என்றும்,  ஆதாரங்களின் அடிப்படையில் மனுதாரர் தாலியை கழற்றி இருப்பதும் அதை வங்கி லாக்கரில் வைத்திருப்பதையும் அவரே ஒப்பு கொண்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், கணவர் உயிருடன் இருக்கும்போது இந்து மதத்தை சேர்ந்த பெண் தாலியை கழற்றக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்று தெரிவித்துள்ளனர்..
ஒரு பெண்ணின் கழுத்தில் தொங்கும் தாலி என்பது திருமண வாழ்க்கையின் தொடர்ச்சி என்றும், அது ஒரு புனிதமானது,. அது கணவன் இறந்த பிறகுதான் அகற்றப்படும். எனவே, மனுதாரர் அதை நீக்குவது  எதிர்மனுதாரரின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடும்.  எனவே இதை உச்ச பட்ச மன ரீதியான துன்புறுத்தலாக கருதலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர்..
தாலியை கழற்றுவது திருமண உறவிற்கு முற்றுப்புள்ளி வைக்க போதுமானது என்று சொல்லவில்லை என்றும்  ஆனால், மனைவியின் செயல், அவரது நோக்கத்தைப் பற்றி ஒரு அனுமானத்தை வரைவதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. பிரியும் போது தாலிச் சங்கிலியை அகற்றிய  செயல்,  இரு தரப்பினரும் சமரசமாகி வாழ்க்கையை தொடரும் எண்ணத்தில் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வர நம்மைத் தூண்டுகிறது" என தெரிவித்துள்ளனர். எனவே ஈரோடு குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாகவும் இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக தீர்ப்பளித்துள்ளனர்.