#Breaking கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
tn

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நீடிப்பதாக மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில் பள்ளி நிர்வாகிகள் ஐந்து பேர்  கைது செய்யப்பட்டனர் . மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சின்ன சேலம் காவல்துறையினர் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

kallakurichi

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் ஐந்து பேரும் ஜாமீன் கோரி சென்னை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  தங்கள் மீதான குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லை .எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்கிட வேண்டும் என்று மனுவில் அவர்கள் குறிப்பிட்டனர்.   மனுவை  விசாரித்த நீதிமன்றம், தனியார் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன் என்று சிபிசிஐடிக்கு  கேள்வி எழுப்பியது.

Madras Court

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 3 பேர், 2 ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது  சென்னை உயர்நீதிமன்றம். பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, 2 ஆசிரியர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் 2வது பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் முரண்பாடு இல்லை, விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிப்பதாக நீதிபதி இளந்திரையன் அறிவித்துள்ளார்.