சென்னை நந்தனம் சந்திப்பில் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் - முக்கிய தகவல் இதோ!!

 
tn

 10 நாட்களுக்கு இன்று முதல் சென்னை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சோதனை முறையில் மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை நந்தனம் சிக்னல் அருகில் இன்று முதல் 10 நாட்களுக்கு சோதனை முறையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் நடைபெற உள்ளது. 

tn

வெங்கட் நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் வெங்கட் நாராயணா சாலை சந்திப்பில் இடது புறம் சென்று நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டொயோட்டோ ஷோரூம் முன் யூ திருப்பம்  திரும்பி தங்கள் இலக்கை அடையலாம்.

செனடாப் சாலையிலிருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் இடது புறம் சென்று சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று டொயோட்டோ ஷோரூம் முன் யூ திருப்பம் திரும்பி சென்று அவர்கள் சேரும் இடத்தை அடையலாம்.

tn

வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும்,  இது தொடர்பாக ஆலோசனைகள் இருந்தால் dcpsouth.traffic@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.