சென்னையில் நாளை முதல் மாலை நேரங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம்..

 
சென்னையில் நாளை முதல் மாலை நேரங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம்..

சென்னையில் நாளை முதல் மாலை நேரங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளது.  

மழை

 சென்னை மற்றும் தமிழகத்தின்  பெரும்பாலான பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.  குறிப்பாக சென்னையை பொறுத்தவரை  கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.  ஒருசில நாட்கள் லேசான மழையும், கடந்த 11 மற்றும் 12-ந்தேதிகளில் மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.  இந்த நிலையில் நாளை (16-ந்தேதி) முதல் சென்னையில் மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து  வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வார இறுதியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

rain

நாளை (சனிக்கிழமை) முதல் சென்னையின் வடமேற்கு பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மலைகளின் திசையில் இருந்து காற்று வருவதால் வடமேற்கு பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் 50 மி.மீ. வரை மழை பெய்யலாம். இந்த மழை சில நாட்களுக்கு தொடரலாம். நேற்று கடலோர பகுதியில் லேசான மழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் பருவக்காற்றின் வேகம் குறையும். காற்று வீசுவது மேற்கு திசையில் இருந்து வடமேற்கு திசைக்கு மாறும். கடற்காற்று தாமதமாக வீசுவதால் பகல் நேரத்தில் வெப்பநிலை உயரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.