சென்னை புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை

 
ச்ச்

 சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.   இதனால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடிக்கொண்டிருப்பதால் பள்ளி ,கல்லூரிகளுக்கு செல்வோர் வேலைக்குச் செல்வோர் மிகுந்த அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

 இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. 

ம

 தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதனால் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி,  மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. 

 கிண்டி, புரசைவாக்கம், எழும்பூர், மாம்பலம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.  

 சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், முகப்பேர், ஆவடி, அயப்பாக்கம், அண்ணனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை ஏழு முப்பது மணிக்கு மேல் கன மழை பெய்து வருகிறது. 

 வெளுத்து வாங்கிய இந்த கனமழையால் சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடிக் கொண்டிருக்கிறது.  இதனால் வேலைக்கு செல்வோர்,  பள்ளிகளுக்கு செல்வோர் மிகுந்த அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.