அசானி புயல் எதிரொலி - தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை!!

 
tn

அசானி புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை அசானி  புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் தீவிர புயல்  அசானி தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.  தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளை நெருங்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


இந்நிலையில் தமிழ்நாட்டில அசானி  புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . நாளை முதல் மூன்று நாட்களுக்கு கடலோர ஒடிசா பகுதி மற்றும் ஆந்திரப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை , திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி  உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.