#BREAKING நீலகிரி, கோவையில் இன்றும் மிக கனமழை தொடரும்!!

 
rain

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

rain

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவையில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டு பல்வேறு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஐந்து நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழையும் , தேனி,  திண்டுக்கல் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain

நெல்லை, கன்னியாகுமரி, வட தமிழகம், புதுச்சேரி ,காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  அதிகபட்சமாக நீலகிரியின் கூடலூர் பஜார் பகுதியில் 23 சென்டிமீட்டரும் , மேல் கூடலூரில் 22 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக கூறும் குறிப்பிட்டுள்ளது. 

Rain

லட்சத்தீவு கேரளா கர்நாடகா கடலோரம் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்று எச்சரித்துள்ள நிலையில் , மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்றும் கூறியுள்ளது.