அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை..

 
மழை


தமிழகத்தில் அடுத்த  3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல்  ஒரு வாரமாகவே  தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில்  மழை பெய்து வருகிறது.  இன்றும் நாளையும் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருச்சி, நாகை, ராமநாதபுரம் ஆகிய  10  மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.