தமிழ்நாடு, கேரளாவில் கனமழை பெய்யும்!

 
மழை

நேற்றுமுன் தினம் காலை ஆந்திரபிரதேச கடலோரம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி”  புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது. 

படம்

இது நேற்று காலை 05:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினத்திற்கு மேற்கே நிலவியது. இது இன்று  காலை 08:30 மணி அளவில் மேலும்  வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது. இது படிப்படியாக மேலும் வலுவிழக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அரபிக்கடலில் மேற்கிலிருந்து மேற்குத் திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு அருகில் வங்காள விரிகுடாவின் மறுபுறம் அசானி புயல் நிலைகொண்டுள்ளது. இதன் எதிரொலியால் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும்,  கேரளா மற்றும் குமரியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.