தமிழகத்தில் குரங்கம்மை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

 
Ma Subramanian

குரங்கம்மை பரவலின் எதிரொலியாக தமிழகத்தில் குரங்கம்மை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழக எல்லை பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில்  சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மை கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளின் முகத்திலோ அல்லது முழங்கால்களுக்கு கீழேயோ ஏதேனும் கொப்புளங்கள் பாதிப்பு இருக்கிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.ஐ.சி.எம்.ஆர். விதிகளின்படி வெளிநாடுகளில் இருந்து வருகிற அத்தனை பயணிகளையும் மாஸ் ஃபீவர் ஸ்கிரீனிங் கேம்ப்ஸ் என்ற அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். 

ma Subramanian

குரங்கம்மை பரவல் தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பெருகி கொண்டு வருகிறது.  கடந்த வாரம் வரை 63 நாடுகளில் குரங்கம்மை நோய் பாதிப்பு இருந்த நிலை மாறி, தற்போது 72 நாடுகளுக்கு கூடுதலாக பரவி உள்ளது. உலகம் முழுவதும்  72 நாடுகளில் 14,533 பேருக்கு இந்த குரங்கமை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கேரளா, டெல்லி, தெலங்கானா போன்ற மாநிலங்களில் குரங்கம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.  எனவே தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிப்பதும் கேரளா, ஆந்திர எல்லைகளில் அங்கிருந்து வருபவர்களை குரங்கம்மை பாதிப்பு ஏதும் இருக்கிறதா? என்பதை கண்டறிவதும் தொடர்ந்து எல்லைகளில் வருபவர்களை ஸ்டார்சுரேசன் பரிசோதனை செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினார்.