“பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்” - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

 
rn

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

அனைத்து பள்ளிகளுக்கும் 77 வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கி சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது.

dpi

அவற்றில் சில  பின்வருமாறு:-

*தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்கும் முன்னே வந்து விட வேண்டும்

*மாணவர்கள்,  சண்டை பாலியல் வன்முறையை முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும்

*பேருந்து மேற்கூரையில் அமர்ந்து பயணிப்பதை தவிர்க்குமாறு  மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்

*பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விட்டால் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

schools open

*பழுதான கட்டிடத்திலோ மரத்தடியிலோ வகுப்பு நடத்தக் கூடாது

*தனியார் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா?விடுதிக் கட்டடங்கள்,தீ தடுப்பு ஏற்பாடுகள் உரிய அனுமதி பெற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

*சத்துணவை தலைமை ஆசிரியர் ஆய்வு செய்து தரத்தையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.

*ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

 *மாணவர்களை  எந்த காரணம் கொண்டும் ஆசிரியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது.

school opening

 *மாணவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது.

 *உணவு இடைவேளைக்கு பிறகு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பாடு பயிற்சி அளிக்க வேண்டும்.

 *பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும்.

 *மாணவர்களின் பாதுகாப்பிற்கும் தலைமை ஆசிரியரே உத்தரவாதம் அளிக்க வேண்டும்