பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை-தலைமை ஆசிரியர் கைது

 
st

பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

 தூத்துக்குடியில் ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(வயது 56).   இவர் முத்தையாபுரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.   அப்பள்ளியில் படிக்கும் 10-ம் மாணவி  மீது ஆன்ந்தராஜ்க்கு ஈர்ப்பு இருந்து வந்திருக்கிறது.

b

இதனால் அந்த மாணவியிடம்  மெல்ல மெல்ல நெருங்கி பழகி வந்து பின்னர் திடீரென்று பாலியல்  கொடுத்திருக்கிறார்.   இதில் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி வீட்டிற்கு சென்றதும் தனது தாயாரிடம் சொல்லி அழுது இருக்கிறார் .  இதைக் கேட்டு அதிர்ந்த அந்த மாணவியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியரை கைது செய்துள்ளனர்.