இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ. 37 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை..

 
gold


சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு  80 ரூபாய்  குறைந்து  விற்பனையாகிறது.  

தங்க ஆபரணங்கள் எப்போதுமே பெண்களுக்கு பிடித்தமான ஒன்றுதான்,  அதிலும்  தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மற்றும்  தங்கம் வாங்கும்  மாநிலங்களில்   தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தங்கம் மூதலீட்டின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் சூழலில் அதன் விலை எப்போதுமே சற்று தடுமாற வைக்கும்.  கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி  மத்திய அரசு  தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்திய பிறகு  தங்கத்தின் விலை தாறுமாறான  ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  ஆனால்  இம்மாத தொடக்கத்தில் ( செப்) இருந்தே  தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில்,  இடையே சற்று ஏற்றம் கண்டது.  

gold

பிறகு மீண்டும் குறையத்தொடங்கிய நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் வரை குறைந்தது.    இந்த வாரமும் சரிவுடனேயே தொடங்கிய தங்கம் விலை,  குறிப்பாக நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 அதிகரித்து  ஒரு சவரன் ரூ.37,056-க்கு விற்கப்பட்டது. இந்த விலை   நகைப்பிரியர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்திய  நிலையில்,   இன்றைய தினம்  மகிழ்விக்கும் விதமாக  தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்திருக்கிறது.  

gold

அதாவது சென்னையில் இன்று   22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன்  ரூ.36,960-க்கு விற்பனையாகிறது. அதேபோல்  கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம்   ரூ.4,620-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் சரிந்துள்ளது.   சென்னையில் சில்லறை விற்பனையில்  ஒரு கிராம் வெள்ளியின் விலை குறைந்து,   61 ரூபாய்  80 காசுகளுக்கு  விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு  கிலோ வெள்ளி ரூ. 61 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.