ஓணம் பண்டிகை - ஜி.கே.வாசன் வாழ்த்து!

 
tn

தமிழகத்தில் வாழும் கேரளா மக்கள் அனைவருக்கும் ஜி.கே. வாசன் ஓணம் பண்டிகை நல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

Onam

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கேரளா மக்களின் பாரம்பரியத்தையும் , கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக ஓணம் பண்டிகை எல்லோராலும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது .  

gk

கேரளாவில் ஒருகாலத்தில் பொற்கால ஆட்சியை வழங்கிய " ஓணத்தப்பன் ' ' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட , மகாபலி மன்னன் தனது மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதை காண ஆண்டுதோறும் இவ்வுலகிற்கு வருவதாக ஐதீகம் . அவரின் நினைவாக " ஓணம் பண்டிகை கொண்டாப்படுகிறது . இந்நாளில் கேரளா மக்கள் , ஆடல் , பாடல் , விளையாட்டுப் போட்டி மற்றும் விதவிதமான உணவு வகைகளோடும் , மகிழ்ச்சியோடும் மகாபலி மன்னனை வரவேற்பதாக இப்பண்டிகை அமைந்துள்ளது . இந்த ஓணம் பண்டிகை ஜாதி , மதம் , இனங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையோடு கொண்டாடும் மிகச் சிறந்த பண்டிகை . 

tn

இந்நாளில் தமிழகத்தில் வாழும் மலையாளம் மொழிப் பேசும் கேரளா மக்களுக்கு ஒணம் பண்டிகை திருநாளில் அனைத்து வளங்களும் , நலங்களும் பெற்று வாழ வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.