74ஆவது குடியரசு தினம் - டிடிவி தினகரன் வாழ்த்து!!

 
ttv dhinakaran

பல்வேறு கலாச்சாரங்களும், பலதரப்பட்ட பண்பாடுகளும் ஒருங்கே அமைந்த இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் 74ஆவது குடியரசு தின வாழ்த்துகளை டிடிவி தினகரன்  தெரிவித்துக் கொண்டுள்ளார்.

National Flag

இதுக்குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பல்வேறு கலாச்சாரங்களும்,பலதரப்பட்ட பண்பாடுகளும் ஒருங்கே அமைந்த இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் 74ஆவது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் நாம் பெருமை கொள்வோம். புவியியல் அமைப்பு, மொழி, இனம், மதம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற உணர்வு கொண்டு நாம் அனைவரும் இந்தியராக ஒன்றிணைந்திடுவோம்.

TTV Dhinakaran

எந்தப் பேதமும் பார்க்காமல் குடிமக்கள் அனைவரையும் நடுநிலையோடு மதிக்க வேண்டிய அவசியத்தை அரசியலமைப்புதான் கட்டிக்காப்பாற்றுகிறது. அதன்வழியில் எல்லாத் தரப்பு ஒற்றுமையோடும், நல்லிணக்கத்தோடும், நிம்மதியோடும் வாழ்வதற்கான சூழலைப் பேணிடவும் இந்நாளில் உறுதியேற்றிடுவோம். மக்களும் தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கான பணிகளில் அனைவரும் பங்கு பெறுவோம். ஜனநாயகத்தின் வழி நின்று தமிழக மக்கள் அனைவருக்கும் பயன் தருகிற மாற்றங்களை உளப்பூர்வமான குடியரசு தின வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.