குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

 
tnpsc

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC

அரசு காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது.   இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி குரூப்-4 தேர்வானது வருகிற ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.  இதற்கு காலி பணியிடங்கள் ஆக 7383 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் வீட்டு வசதி வாரியங்கள் உள்ள 163 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது என்பது பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவில் மூலம் நிரப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

tnpsc

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தின் மூலம்  ஹால் டிக்கெட்டை  டவுன்லோடு செய்து கொள்ளலாம்.OTR கணக்கு எண்ணை  பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  குரூப்-4 தேர்வுக்காக இதுவரை 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.