"ஹஜ் பயணம் சென்னையில் இருந்து புறப்பட அனுமதி" - ஜி.கே. வாசன் நன்றி!!

 
tn

ஹஜ் பயணம் சென்னையில் இருந்து புறப்பட அனுமதியளித்தமைக்கு மத்திய அரசுக்கு ஜி.கே. வாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் இருந்த புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இடமாக கடந்த வருடத்திற்கு முன்னர் இருந்தது . கொரோனா தொற்றின் காரணமாக ஹஜ்ஜிற்கு பயணம் புறப்படும் இடம் 21 ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது . இதனால் சென்னையில் இருந்து புறப்படும் இஸ்லாமிய சகோதர , சகோதரிகள் கேரளா மாநிலம் கொச்சின் செல்ல வேண்டி இருந்தது . இதனால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது . 

tn
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் மூலமாகவும் , மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அவர்களை நேரில் சந்தித்தும் தமிழக இஸ்லாமியர்கள் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் புறப்பட அனுமதிக்குமாறு த.மா.கா சார்பாக வலியுறுத்தினேன்.

gk

இந்நிலையில் மேலும் தமிழகத்தில் இருந்து பல்வேறு இயக்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்பொழுது புனித ஹஜ் பயணம் சென்னையில் இருந்து புறப்பட பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் . கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் , மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அவர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.