+2 முடித்த மாணவர்களுக்கு பிரபல நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் பயிற்சி..

 
+12  முடித்த மாணவர்களுக்கு பிரபல நிறுவனத்தில்  வேலைவாய்ப்புடன் பயிற்சி..

2021 மற்றும்   2022 ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டத்தை  அறிவித்துள்ளன. 12-ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்,   இந்த திட்டத்தில் சேர அக்டோபர் 28 முதல் 30-ம் தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது.
 
தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாகத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அரசுப் பள்ளி படித்த மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee “Early Career Program”க்கான பயிற்சிக் கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது. இத்திட்டத்தின் மூலம்  மாணவர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்குவதுடன் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு HCL Technologies-ல் கீழ்க்கண்ட முழுநேர பணிவாய்ப்பை வழங்குகின்றது.

+12  முடித்த மாணவர்களுக்கு பிரபல நிறுவனத்தில்  வேலைவாய்ப்புடன் பயிற்சி..
 
இந்த  Internship பயிற்சி காலத்தின்போது  7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூ. 10,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.  

பணியில் சேர்ந்த உடனேயே  தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை வழங்கப்படும் (பணிநிலைக்கு ஏற்றாற்போல்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன்  HCL Technologiesல் பணிபுரிந்து கொண்டே  BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடங்குவதற்கு வாய்ப்பை பெற்றுத் தருகின்றது.

மேலும்,  அவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியையும்   HCL Technologies நிறுவனமே வழங்குகிறது. அதுமட்டுமின்றி  மாணவர்கள்  உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில்   தங்கள் பணியினை திடங்கும்  வாய்ப்பையும் அளிக்கின்றது.

+12  முடித்த மாணவர்களுக்கு பிரபல நிறுவனத்தில்  வேலைவாய்ப்புடன் பயிற்சி..

மாநிலம் முழுவதிலும் இந்த HCL “Techbee”திட்டத்தின் தேர்வு முகாமினை அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  HCL Techbee ”Early Career Program”மில் மென்பொருள் வடிவமைப்பு, அனலிஸ்ட், டிசன் என்ஜீனியர், டேடா என்ஜீனியர், சம்போர்ட் மற்றும் பாரஸ்சஸ் அசோசேட், சர்வீஸ் டெஸ்க் மற்றும் டிபிஒ பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும்.
 
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிரிவில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை – 88079 40948. மதுரை – 9788156509. திருநெல்வேலி – 98941 52160. திருச்சி – 94441 51303. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர்– 89032 45731, 98655 35909.