அறநிலையத்துறை கட்டியதா? பின் அத்துறைக்கும் அமைச்சருக்கும் அங்கு என்ன வேலை?

 
h

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க இருப்பதாக அறிவித்திருந்தனர்.

அவரு ஒரு ஆளா.? எதையோ பார்த்து ஏதோ குரைக்கிறது என்று எடுத்துகொள்வோம்.  H.ராஜாவை கேவலப்படுத்திய சேகர் பாபு. | Lets look at something and assume  that something is barking. Sekar Babu who insulted H.Raja.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், “சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களால் கட்டப்பட்ட கோவில் கிடையாது. அது மன்னர்கள் எழுப்பிய கோயில். எனவே அந்த திருக்கோயிலில் வரும் வருமானங்களை கணக்கு கேட்கும் போது முறையாக கணக்கு காட்ட வேண்டியது தீட்சிதர்களின் கடமை. அதேபோல் நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளை பற்றி கேள்வி கேட்கும் பொழுது அதற்கு பதில் சொல்ல வேண்டியதும் அவர்களின் கடமை. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள்ளே மானா வாரியாக தீட்சிதர்கள்  கட்டிடங்களை எழுப்பி உள்ளனர். அவ்வாறு எழுப்ப பட்டிருக்கும் கட்டிடங்களின்  நிலை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது இந்து சமய அறநிலையத்துறையின் கடமை.

தீட்சிதர்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் இந்து சமய அறநிலைத்துறை  அதிகார துஷ்பிரயோகம் அத்துமீறல் செய்யவில்லை. எனவே சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்வதை யாரும் தடுக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்தித்து அதற்குரிய விளக்கங்களை அளிக்க தயார். சிதம்பரம் நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமான இடம். தீட்சிதர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவதற்கு யாரும் தடையாக இல்லை. இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் தவறு என்றால் அவர்கள் தாராளமாக நீதிமன்றத்திற்கு செல்லலாம்.” எனக் கூறியிருந்தார்.


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவை ட்வீட் செய்துள்ளார். அதில், அறநிலையத்துறை கட்டியதா? பின் அத்துறைக்கும் அமைச்சருக்கும் அங்கு என்ன வேலை. நடையை கட்டு. மூச்சுக்கு 300 தடவை அறநிலையத்துறைக்கு சொந்தமானதுன்னு சொல்றீங்களே அது எல்லாம்ல் தமிழக அரசு கட்டின கோவில்களா? அமைச்சர்” என கேள்வி எழுப்பியுள்ளார்.