நாளை குரூப் 4 தேர்வு- அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 
exam

தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 4 தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு  பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

நாளை குரூப்-4 தேர்வு: சிறப்பு பேருந்துகள் இயக்கம்- Dinamani


குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 7301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது. இத்தேர்வை 22 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நாளை  நடக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது.

சென்னையில் மட்டும் 503 மையங்களில் குரூப் 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் எழுதுகின்றனர். இவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழ்நாடு முழுவதும் நாளை  குரூப்4 தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கையின் படி தேர்வு மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்து இயக்கப்படும்.

இந்த சிறப்பு பேருந்துகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபடுவர். சென்னையில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 2,500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். ஆனால் தேர்வு காரணமாக வழக்கமான நாட்களில் இயக்கப்படுவது போல் சுமார் 3,000 பஸ்கள் இயக்கப்படும். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் பஸ்கள் என்று ஒட்டு மொத்தமாக 11670 பேருந்துகள்  இயக்கப்படும்’ என்றனர்.