அதிமுக நிர்வாகி வீட்டில் கையெறி குண்டுகள்

 
b

அதிமுக நிர்வாகி வீட்டில் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் திருச்சி அரியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 திருச்சியில் அரியமங்கலம் திடீர்நகர் பகுதியில் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேபிள் சேகர்.   இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளர் .  சேகரின் மனைவி கயல்விழி மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் .  சேகரின் மகன் முத்துக்குமார்(29).

ம்க்

இந்த  முத்துக்குமார் வீட்டிலேயே வெடிகுண்டுகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.  இந்த தகவலை அடுத்து திருச்சி தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி,  பொன்மலை உதவியானவர் காமராஜ்,  வெடிகுண்டு தடிப்பு பிரிவு ஆய்வாளர் எட்வர்டு,  தடயவியல் துறை ஆய்வாளர் ராஜேந்திரன்,  சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி,  காவலர் ஜோதி  ஆகியோர் முத்துக்குமாரின் வீட்டை சோதனையிட்டுள்ளனர் .

பன்றி பண்ணை வைத்திருக்கும் குமரன் நகர் வீட்டிலும் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளன.  இந்த சோதனையில் மூன்று கிலோ எடை கொண்ட இரண்டு பால்ரஸ் குண்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள்.  ஒரு கையெறி குண்டை  வீசி ஒருவரை கொலை செய்ய விட முடியும்.   வாகனங்களில் செல்பவர்களை நிலை குலைந்து போக செய்ய முடியும்.  ஆகவே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வெடிண்டுகளை தயாரித்த முத்துக்குமார் மீது அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

 கைப்பற்றப்பட்ட பட்டாசு வெடிகளும் பரிசோதனைக்கு பின்னர் வெடிகுண்டுகள் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .   

முத்து குமார் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட  வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.   கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முத்துக்குமாரின் வீட்டில் வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த நிலையில் தற்போது கையெறிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.