கமல்ஹாசனுக்கு திருமாவளவன், அண்ணாமலை சொன்ன வாழ்த்து

 
க்ட்

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின்  பிறந்த தினம் இன்று.   இதை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . 

அன்

முதல்வர் மு. க . ஸ்டாலின்  கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.   அதை எடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும்,  மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவருமான அன்புத்தோழர்  கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.  கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!என்று வாழ்த்துக்கள் கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இன்று பிறந்தநாள் காணும் மக்கள்நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன்  அவர்களுக்கு விசிக சார்பில் எமது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருமாவளவன்.


இந்திய திரை உலகின் தலைசிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு  கமல்ஹாசன் அவர்களுக்கு  தமிழக பாஜக சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்! என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.