ஆசிரியர் தினத்தையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து!!

 
vijayakanth

ஆசிரியர் தினத்தையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அதன் பள்ளிக்கூடங்கள் தான் தீர்மானிக்கிறது. ஏனென்றால், வருங்கால தலைமுறைகளை உருவாக்கும் பெரும் பொறுப்பு பள்ளிக்கூட ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது.  சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போதைக்கு அடிமையாவது வேதனை அளிக்கிறது.  அதேபோல் மாணவர்கள் தற்கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு தவறான பாதையில் செல்லும் மாணவர்களை கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும். வெறும் ஏட்டு கல்வியோடு மட்டும் நில்லாது, வாழ்வியல் நெறிமுறைகளையும், நல்லொழுக்கங்களையும் கற்று கொடுத்து ஒவ்வொரு மாணவரும் இந்த நாட்டின் நல்ல குடிமகனாக வாழ வழிகாட்டி இந்த நாட்டின் எதிர்காலத்தை சிறந்த முறையில் மாற்றி அமைக்கும் ஒரு யாகம் தான் ஆசிரியப்பணியாகும். அந்த பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 

vijayakanth

 ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தவர். டாக்டர் அப்துல்கலாம் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை முன்மாதிரியாக கொண்டு ஆசிரியர்கள் தங்களது பணியை பொதுநல சிந்தனையோடு சிறப்பாக செய்ய வேண்டும். மேலும், ஆசிரியர் பெருமக்களின் அனைத்து முயற்சிகளுக்கும் தேமுதிக எப்போதும் துணை நிற்கும் என  உறுதி அளிப்பதோடு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பட்டதாரி அணியை சேர்ந்தவர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின  நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.