நாடகம் பார்க்க முடியாமல் தவிக்கும் பெண்கள்! தொழில்நுட்பக் கோளாறால் அரசு கேபிள் முடக்கம்

 
vijay tv

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அரசு கேபிள் இணைப்புகள் இன்று காலை முதல் இயங்கவில்லை.

Poove Unakkaga - Promo | 25 March 2021 | Sun TV Serial | Tamil Serial -  YouTube | Sun tv serial, Tv, Serial


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கேபிள் இணைப்புகள் இன்று அதிகாலை 3 மணி முதல் பல்வேறு பகுதிகளில் இயங்கவில்லை. தமிழகத்தில் சுமார் 22 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் அரசு கேபிள் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 50 சதவீத பயனாளர்கள் இன்று இணைப்பு இல்லாமல் அவதிப்படுகின்றனர். 

அதிகாலை முதலே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அரசு கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து இணைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணைப்புகள் துண்டிக்கப்பட்தாகவும், அதனை சரி செய்யும் பணியில் நாங்கள் துரிதமாக நடைபெற்றுவருதாகவும் கூடிய விரைவில் சரி செய்து முடிப்போம் எனக் கூறினார்.