ஆளுநர் ஆர்.ஏன்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்!!

 
rn ravi

தமிழக ஆளுநராக ஆர்.ஏன்.ரவி  பதவியேற்றதிலிருந்து தமிழக அரசுக்கும் அவருக்கும் மோதல் போக்காகவே காணப்படுகிறது.  தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் சட்ட மசோதாக்களின்  மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சுணக்கம் காட்டி வந்தார் ஆர்.ஏன்.ரவி. 

rn
குறிப்பாக நீட் தேர்வு விவகாரத்தில் நிறைவேற்றப்பட்டு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி அதிர்ச்சி கொடுத்த இவர்,  பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார்.  பின்னர் மீண்டும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில்,  குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.  அத்துடன் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தமிழக அரசு நியமனம் செய்யலாம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு,  ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.   தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே  இந்தி திணிப்பு தொடர்பாகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

RN Ravi

இந்த சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ஏன்.ரவி  இன்று திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்.  காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் அவர்,  டெல்லியில், மத்திய அமைச்சர்களை அவர் சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது. 16ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.ஏன்.ரவி கலந்து கொள்கிறார்.  இந்த விழாவில் தமிழக முதல்வர்  பங்கேற்கும் நிலையில் ஆளுநர் இந்த திடீர் டெல்லி பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. புதிய கல்வி கொள்கை – இந்தி திணிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் கருத்து போர் நடைபெறுவது கவனிக்கத்தக்கது