தொடரும் அடாவடி! பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல்

 
students

அரசு பள்ளி மாணவர்களிடையே கோஷ்டி மோதல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மாணவர்களின் மோதலை தடுக்க பள்ளி செல்லும் நேரத்தில் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளானர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் முருகமலை மற்றும் ஈ.புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தில் வந்து பெரியகுளம் பேருந்து நிலையத்தில் இறங்கினர். பின்பு பள்ளி மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதலில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர்.

பள்ளி மாணவர்கள் பொது இடங்களில் தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருவதை தடுப்பதற்கு பள்ளி நாட்களில் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.