கலை, அறிவியல் கல்லூரியில் சேர இன்று முதல் கலந்தாய்வு!!

 
college ttn

 தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.

college

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்களில் சேர நான் உங்கள் லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இன்று முதல் கலந்தாய்வு தொடங்கியுள்ளது.  முதல் நாளான இன்று விளையாட்டு வீரர்கள் , முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் என சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

college reopen
கடந்த ஆண்டு விட சென்னை மாநிலக் கல்லூரியில் 1106 இடங்களில் சேர 95 ஆயிரத்து136 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  சிறப்பு பிரிவு கலந்தாய்வுக்கே நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அதிக அடிப்படையில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் சேர்கையை நடத்தி முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாநில கல்லூரியின் முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.வருகிற 8ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.