சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ரூ.94.22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

 
gold

கடந்த 2022-ம் ஆண்டில் ரூ.94.22 கோடி மதிப்பிலான 205.84 கிலோ கிராம் எடை உடைய தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

gold

கடத்தல் தொடர்பாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 97 பேர் கைது செய்யப்பட்டனர்.  பெரும்பாலான தங்கம் துபாய், ஷார்ஜா மற்றும் இதர வளைகுடா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டது. ரூ.10.978 கோடி மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, 81 வழக்குகள் பதிவு செய்தனர். இதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே 14.02 கோடி ரூபாய் மதிப்பிலான 27.665 கிலோ கிராம் எடை உடைய போதைப் பொருளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதை கடத்த முற்பட்ட 12 பேரை கைது செய்தனர்.  குரங்கு, பாம்பு, ஆமை உள்ளிட்ட விலங்குகளை வெளிநாடுகளில் இருந்து  கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வனவிலங்குகள் பெரும்பாலும் தாய்லாந்து தலைநகர்  பாங்காங்கிலிருந்து கடத்திவரப்பட்டதாகும்.

gold

ரூ.1.269 கோடி மதிப்பிலான 5274.18 கேரட் உடைய வைரம் மற்றும் இதர மதிப்புமிக்க கற்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து 5 வழக்குகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். ரூ.3.90 கோடி மதிப்புடைய சிகரெட், மின்னணு மற்றும் இதரப் பொருட்களை  சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையினர் முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி தெரிவித்துள்ளார்.