நீண்ட நாட்களுக்கு பின்னர் குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் நிம்மதி!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 39,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,144 அதிகரித்தது.  கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கு மேல் உயர்ந்தது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 உயர்ந்து 4,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 39,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று மாலை மீண்டும் விலை அதிகரித்தது. 

இந்நிலையில், இன்று 5 நாட்களுக்கு பின்னர் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,950க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 30 காசுகள் குறைந்து ரூ.67.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து ரூ.67,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.