தொடர்ந்து 2வது நாளாக சரிந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் குஷியோ குஷி!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு  304 ரூபாய் குறைந்து ரூ.41 ஆயிரத்து 520  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று குறைந்தது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 41 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5228 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் சரிந்தது.  வெள்ளியின் விலை கிராமுக்கு 15 காசுகள் சரிந்து  ரூ.74க்கு விற்பனையானது. ஒரு கிலோவுக்கு 1500 ரூபாய் சரிந்து ரூ.74,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு  304 ரூபாய் குறைந்து ரூ.41 ஆயிரத்து 520  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கிராமுக்கு 38 ரூபாய் சரிந்து  5,190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 பைசா  குறைந்து, ரூ.73.50ஆக சரிந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து,  ரூ.73,500 ஆக விற்பனையாகி வருகிறது.