தொடர் உச்சத்தில் தங்கம் விலை - மீண்டும் ஒரு சவரன் ரூ.42,000ஐ தாண்டியது

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 42 அயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்தது.  கடந்த 9-ந்தேதி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. இதனனையடுத்து தங்கம் விலை ஏற்ற, இறங்கங்களை சந்தித்து வந்தது.  நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.56 குறைந்து 41840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை, நேற்று சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.41,888-க்கு விற்பனையானது. இதேபோல் நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் அதிகரித்து ஒரு சவரன் 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து ரூ.5,250ஆகவும், சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து ரூ.42 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆனால் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.00ஆகவும்,  கிலோ ரூ.74 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.