தங்கம் விலை இன்று குறைந்தது - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 41,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை அதிரடியாக  சவரனுக்கு ரூ.312 உயர்ந்து , ஒரு சவரன் ரூ. 42 ஆயிரத்தை தாண்டியது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,260க்கு விற்கப்பட்டது. அதேபோல் சவரனுக்கு ரூ. 312  உயர்ந்து ஒரு சவரன், ரூ.42,080க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90க்கும்  விற்பனை செய்யப்படுகிறது

இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.41,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.23  குறைந்து ரூ.5,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு  ரூ.1.20 குறைந்து ரூ.73.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1200 குறைந்து ரூ.73,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.