மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் கலக்கம்!

 
gold

சென்னையில் இன்று  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.41,888-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்தது.  நேற்று முன் தினம் சற்று குறைந்து ரூ.41,896-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.56 குறைந்த. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.41840-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.5230-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.74-க்கு விற்கப்பட்டது.  

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.41,888-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.5,236-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.