அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்!!

 
gold

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில்  தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

gold

தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.  இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல இடங்களில் அதிகாலை முதலே நகை கடைகள் திறக்கப்பட்டு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

gold

இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25குறைந்து ரூ. 4.816-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சவரனுக்கு  ரூ.200  குறைந்து ரூ.38,528-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.67 -க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,000 விற்பனை செய்யப்படுகிறது.