தொடர்ந்து சரியும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 056 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது வருகிறது. சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 37,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் 4,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் 62 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 62,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.37 ஆயிரத்து 056-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8 குறைந்து 4ஆயிரத்து 632-க்கு விற்பனை ஆகிறது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,632ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.62-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.62,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.