சென்னையில் தங்கம் விலை சரிவு - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே இந்தியாவில் தங்கம் விலை விலை தொடர் ஏற்றம் காண தொடங்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக தங்க விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 4,680 ரூபாயாக இருந்தது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கம் நேற்று 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 50 ரூபாய் குறைந்து 62 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் வெள்ளி .62 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.