தொடர்ந்து சரிவை சந்திக்கும் தங்கம் விலை - ஆனந்தத்தில் இல்லத்தரசிகள்!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் வரை குறைந்தது. இந்நிலையில் நேற்று  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன்  ரூ.36,960-க்கு விற்பனையானது. அதேபோல்  கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம்   ரூ.4,620-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 61 ரூபாய்  80 காசுகளுக்கு  விற்பனை செய்யப்பட்டது..  ஒரு கிலோ வெள்ளி 61 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனிடையே நேற்று மாலை தங்கம் விலை அதிகரித்தது. 

gold

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 10 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 640 ரூபய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதைபோல வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 பைசா உயர்ந்து ரூ.62.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.62,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.