மக்களே தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு... அதிரடியாக குறைந்த விலை!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 352 குறைந்து 37 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த நில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து, 4754 ரூபாயாகவும்,  சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து, 38,032 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இதேபோல் இன்றும்  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து 37,680 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு  44 ரூபாய்ய் குறைந்து 4,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.