தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் கவலை..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்


சென்னையில்   ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 536-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வண்ணம் உள்ளது. அந்தவகையில் கடந்த 9-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் விலை, கடந்த 14ம் தேதி சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து மீண்டும் ரூ.42 ஆயிரமாக உயர்ந்தது.  பிறகு மீண்டும் கடந்த 14ம் தேதி  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 368-க்கு விற்பனை செய்யப்படது.  நேற்று (ஜன - 15) விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தங்கம் விலை

இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டிருக்கிறது.  நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5296-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.21 அதிகரித்து ரூ.5317-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், நேற்று ரூ.42,368-க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம், இன்று ரூ.168 அதிகரித்து  ஒரு சவரன் ரூ.42,536-க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்திருக்கிறது.  நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில்  இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து  75 ரூபாய் 80 காசுகளுக்கும்,  ஒரு கிலோ வெள்ளி ரூ.75,800-க்கு விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகை காலத்தில் தங்கம் விலை இப்படி தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.