தொடர்ந்து சரியும் ஆபரண தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம் இதோ!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 5ம் தேதி சற்று ஏற்றுத்துடன் விற்பனையான நிலையில், அதன் பின்னர் மீண்டும் குறைந்தது. இதேபோல் நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செயப்பட்ட நிலையில், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை .4,740 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து  4725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரையில், கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.60.50-க்கு விற்கப்பட்டது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி 60,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.