நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கம் விலை குறைவு - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 5 நாட்களுக்கு பின்னர் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 குறைந்து 37,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம் விலை கடந்த வாரம் சனிக்கிழமைக்கு பின் எந்தவிதமான மாற்றமும் இன்றி இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து சவரன் ரூ.38ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,765 ஆகவும், சவரன், ரூ.38,120 ஆகவும் இருந்தது.

 இந்நிலையில், இன்று தங்கம் விலை இன்று கிராமுக்கு 20ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்துள்ளது.சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 குறைந்து 37,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கிராமுக்கு ரூ.20 குறைந்து, 4,745 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் சரிந்து, ரூ.63.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 சரிந்து ரூ.63,500 ஆகவும் விற்கப்படுகிறது.