இன்றும் குறைந்த தங்கத்தின் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.  இந்நிலையில் இன்றும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து  4, 725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரையில், கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.62.40 க்கு விற்கப்பட்டது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி 62,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 5,155 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ. 41,240 ஆக விற்பனையாகிறது.