இல்லத்தரசிகள் அதிர்ச்சி! - திடீரென அதிகரித்த தங்கம் விலை

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் வரை குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன்  ரூ.36,960-க்கு விற்பனையானது. அதேபோல்  கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம்   ரூ.4,620-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 61 ரூபாய்  80 காசுகளுக்கு  விற்பனை செய்யப்பட்டது..  ஒரு கிலோ வெள்ளி 61 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனிடையே நேற்று மாலை தங்கம் விலை அதிகரித்தது.  நேற்றைய மாலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,675 ஆகவும், சவரன், ரூ.37,400 ஆகவும் இருந்தது.

gold

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து குறைந்து 37 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 690 ரூபய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 பைசா உயர்ந்து ரூ.63.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.63,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.